அவள்

ஜொலிக்கும் வைரம் , பட்டை தீட்டும்முன்
வெறும் கூழாங்கல் போலத்தான் தோன்றும்
கல்லை வெட்டி எடுத்து பட்டைத்தீட்ட
அக்கூழாங்கல் தன்னுள்ளிருந்து ஒளிப்
பிழம்பாய்க் கொட்டும் ரத்தினத்து ரத்தினமாய்
அதுபோல் பெண்ணே இத்தனை அழகும்
உன் முகத்தில் இருக்க ..... நீ உம்மென்று
மௌனமாய் இருக்க .......கூழாங்கல்போல் இருக்கிறாய்
மௌனம் நீங்கி உன் முகத்தில் புன்னகை
மலர்ந்தால் நீ வைரம்போல் ஜொலிக்கிறாய்

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (12-Feb-20, 2:32 pm)
Tanglish : aval
பார்வை : 154

மேலே