சாெல்வாயா காதல்
உன் நினைவுகளை யாசிக்கும் என் இதயம்
உன் சுவாசக்காற்றின் மூச்சைப் பிடித்துக் காெள்கிறது
பிரிந்து விடக் கூடாதென்றா இல்லை ஆயுளின் நீட்சிக்கா
நித்தம் நினைந்துருகும் எந்தனுக்கு
நிமிடம் கூட பாேதவில்லை காதலியே
உனை விழியாேடு நிழலாக
சிறைப்பிடித்த காவலன் நான்
காதல் பாேதையல்ல பெண்ணே
இதயத்தின் பேராசை அறிவாயா நீயும்
தினம் தினம் நீ காட்டும் காதல் வன்முறைகள்
தித்திப்பாய் இனிக்குதடி கசப்பேதுமில்லை
கண்ணீரின் உப்பைக் கூட சுவையாக உணர்கின்றேன்
உன் நினைவாேடு கரைவதால் உவர்ப்பேது எனக்கு
இதயம் தாெட்டுச் சென்றவளே
இமை விழித்துக் காத்திருக்கின்றேன்
நான்கறைச் சுவர்களுக்குள் நிரந்தரமாய் தங்கி விடு
என் ஆயுள் வரை உனை சுமப்பேன்
காதலை சாெல்லி விடு