Eraiyae
எனக்குள் இருக்கும் இறையே
உனை நான் உணர்வது முறையே
உனை நான் உணர்வதனாலே
என் வாழ்க்கை உயர்ந்திடும் மேன்மேலே !
எனக்குள் இருக்கும் இறையே
அனைத்திலும் இருப்பது நீயே !
இதை நான் உணர்வதனாலே
என் பண்பு உயர்ந்திடும் மேன்மேலே !
எனக்குள் இருக்கும் இறையே
அணுவுக்குள்ளும் ஆதி அந்தமாகி
ஜ்யோதியாகி ஒளிர்வதும் நீயே !
இதை நாம் உணர்ந்தாலே
மனிதம் உயர்ந்திடும் மேலே !