என் விழிகளின் இறுதிதுளி கண்ணீரும் உனக்காக 555

என்னுயிரே...
உன்னால் ஏற்பட்ட
காயங்களுக்கு...
என் விழிகள் அவ்வப்போது
கண்ணீர் சிந்தித்தான் செல்கிறது...
சதைகளுக்கு நடுவில்தான்
என் இதயம் இருக்கிறது...
உன் இதயம் மட்டும் என்ன
இரும்புகளுக்கு நடுவிலா இருக்கிறது...
அன்று என்னை நீ
ஏற்கமல்
சென்று இருந்தால்...
சென்று இருந்தால்...
சில நாட்களில்
நான் மறந்திருப்பேன்...
மழைதரும் கார்மேகமென
நம்பி இருந்த போதும்...
தூறல் போடாமல்
கலைந்த
கலைந்த
கார்மேகம் போல...
சொல்லாமலே நீ என்னை
மறந்து சென்றதென்னடி...
என் விழிகளின்
இறுதிதுளி கண்ணீரும்...
உனக்காக மட்டுமே
மண்ணில் விழுமடி.....