நிராகரிப்பு

ஒரு நிராகரிப்பானது
எவ்வளவு கொடுமையெனில்
உயிர் வரை சுடுவது
உறக்கம் உணர்வு மறப்பது
காணுமிடமெங்கும் வெறுமை நிரம்பி
காலமும் மரத்துப்போவது
உயிரென்ற வஸ்துவினை
_யிரென்றே கருதுவது
நிழலாகி நிஜம் தேய்ந்து
நிதானம் இழப்பது
ஆசைபாசம் அன்புநேசம்
அனைத்தும் விஷமென நினைப்பது
காலன்வந்து கைதுசெய்தால்
யாவும் நலமென அணைப்பது

Rafiq

எழுதியவர் : Rafiq (15-Feb-20, 9:30 pm)
சேர்த்தது : Rafiq
Tanglish : niragarippu
பார்வை : 135

மேலே