சிரித்தபடி நகர்ந்துவிட்டேன்
ஏற்றிவைத்த தீபஒளியில் அவனைப்
பார்க்கின்றேன்
அழகாய் சிரிக்கின்றான் என்னைப்
பார்த்து
என்னவேண்டும் உனக்கு என்று
கேட்பதைபோல்
நீ கொடுப்பதை பெற்றுதானே வாழ்வே
நகர்கிறது என்று
சிரித்தபடி நான் நகர்ந்து விட்டேன்

