பிழைத்திருக்கிறேன்
கண்ணை கண்டு
கொண்ட காதல்
உன் மௌனம் கொண்ட பின்பும்
உயிர்த்திருக்கிறது
காத்திருப்புகள்
காரியமோ
காரணமோ
கண்ணியமோ
கடமையோ
காதலுக்கு...
வினவ விழைகிறேன் உன்னிடம்
ஏய் காதலே,
ஏன் இன்னும் நீ என்னிடம்?
மழலை மறந்து
பழமை மறைத்து
மனதும் மரத்து
மார்பின் வேகம் குறைந்து
பிழைத்திருக்கிறேன் இன்னும்..
பெறும் பிழையாக
இது பிரிவில்லை என்று தெரிந்தும்
ஏற்க துணியவில்லை ஏன் இதயம்
துணையிருந்த தோள்களும்
கண்ணீர் துடைத்துவிட்டு கைகளும்
ஓரக்கண் பார்வையும்
உதட்டோர புன்னகையும்
ஏன் நினைவுகளில் மட்டுமே
நிரந்தரமாய்
உன் மேதமைக்கும்
ஏன் பேதமைக்கும்
இடையே நம் காதல்
வானிடம் சொல்லிவிட்டு
மேகத்திடம் முறையிடுகின்றேன்
தென்றலோடு சண்டையிடுகிறேன்
உனை தினம் தேடும் ஏன் மனதோடு
போர் தொடுக்கின்றேன்
காலம் காட்டும் பதிலுக்காக
நீ ஏன் கால் மெட்டியிடும் நேரத்திற்காக
பிழைத்திருக்கிறேன்.....