நடந்து செல்கையில்

இருபவனாய் இருப்பதில்
தொடர்கிறது பாவம்
இல்லாதவனாய் இருப்பதிலும்
தொடர்கிறது பாவம்

வானுயர வாழ்வதில் என்ன லாபம்
தரை பார்த்துதான் நடக்கிறேன் நாளும்
தன்னிலை மறக்காத தருணம்
இருந்தாலும் இளைப்பாறுவதே சுகம்

பூட்டாத பூடுகளின்
கண்டுகொள்ளப்படாத சுதந்திரத்தை
உரக்கப்பேசி என்ன பயன்

நீரில் சேறுஉண்டாலும்
மீன் மீனாகவே வாழ்வது அதிசயம்
துன்பத்திலும் துன்பத்தை அனுபவிக்க
கற்றுக்கொண்டேன் அனுபவ அதிசயம்

இதயத்தின் இடைவிடாத துடிப்புகள்
நிற்கும்வரை முதல்வனாய் நான்
முதலடி எடுத்துவைத்த கூற்றுப்படி
பித்தனாய் புலம்புவதால் சித்தன் ஆனேன்

சித்தனாய் சீர்தூக்கி பார்ப்பதில்
உத்தமன் ஆனேன்
உத்தமனாய் வாழ்வதில்
சிவன் ஆனேன்

சிவனாய் இயல் இசை நாடகத்தோடு
இயைந்த வாழ்க்கையில்
சக்தியை தேடி அலைகிறேன்
சந்தர்ப்பவாத வாழ்க்கையை தொடர்ந்தபடி....

எழுதியவர் : மேகலை (18-Feb-20, 9:00 pm)
சேர்த்தது : மேகலை
Tanglish : nadanthu selgayil
பார்வை : 68

மேலே