என் அன்புகுரியவனே
நான் கடந்து வந்த பாதையில் கல்தடுக்கி காயம்பட்டாலும் அதை
கண்டுகொள்ள மாட்டேன்!
முழுநேர சிந்தனையில் மூழ்கி நடக்கும்பொழுது முள்குற்றி குருதி வந்தாலும் அதனை ஒரு பொருட்டாக கருதமாட்டேன்!
சிலர் செய்யும் கேலியை என் செவியால் கூட கேட்க மாட்டேன்!
சிலர் காதலிக்கிறேன் உன்னை என்று கூறினால் கூட அந்த காதல் வளையில் விழ மாட்டேன்!
ஆனால்.....நீ ஒரு நாள் என்னிடம் பேசாமல் இருந்தால் நான் நானாகவெ இருக்க மாட்டேன்!
என் அன்புகுரியவனே.......!