கவிதை ஒன்று எழுதுகிறேன்

காற்றில் என் விரல் நீட்டி
கவிதை ஒன்று எழுதுகிறேன்..
"உனக்காக"
ஏனோ வார்த்தைகள்
நெஞ்சை அடைக்கிறது!
மொளனமாய் அழுகிறேன்..
கண்ணீர் கடலாய் வடிக்கிறேன்..
"உனக்காக"

என் கனவுகளில் 'நீ'
உன் நினைவுகளில் 'நான்'
நம் கண்ணீரில் நம் 'காதல்'

தொடும்தூரம் என் காமம் உள்ளதடி!
தொலைதூரம் என் காதலைச் சொல்லுமடி!

உன்னை எண்ணி 'நான்'
என்னை எண்ணி 'நீ'
நம்மை எண்ணி நம் 'காதல்'

❤️சேக் உதுமான்❤️

எழுதியவர் : சேக் உதுமான் (25-Feb-20, 4:45 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
பார்வை : 93

மேலே