காதல் என்னும் மாய போதை

ஒரு வித போதை !!!
ஆம் முதல் சந்திப்பின் போதை,,
காலங்கள் கழிந்தும் நினைவில் இருந்த போதை,,
தொலைவில் இருந்தவள் அருகில் வந்ததால் ஏற்பட்ட போதை,,
நெருங்கி அமரும் பொழுது எழுந்த போதை,,
கண்ணோடு கண்கள் உரையாடிய பொழுது தோன்றிய புது மொழியின் போதை,,
நெற்றியின் வியர்வை, கைகளின் நடுக்கங்கள் ஏற்படுத்திய போதை,,
ஆம், கைவிரல்களும் மயங்கி அவளின் கைகளை  கோர்த்தது,,
கண்ணின் வழியில் எழுந்த போதையில்,,
பல நூறு ஆண்டுகள் உன்னோடு நான் இது போல் இருப்பேன் என்று பேதை போல் உலர செய்த போதை,,
விரல்கள் கோர்த்த நொடியில் அனைத்தும் மாயமாக உணர்ந்த போதை,,
வாழ்க்கையே அவள் கண்ணில் தான் என்று எண்ணி பார்த்து கொண்டுடிருந்த மாயை ஏ‌ற்படு‌த்‌திய போதை,
வாழ்க்கையின் முதல் தலையனையை இரண்டாவதாக உணர்ந்த போதை,,
சிறு சிணுங்கல்களில் சிதரிப்போன போதை,,
நின்று கொண்டே தோல்களில் தலை சாய்த்து பேசிய போதை,,
எச்சிலின் அருவருப்பை தகர்த்து எரிந்த போதை,,
அவளின் உடல் எடையை அறியத் துடித்த போதை,,
உடலின் வெப்பங்கள் ஏற்படுத்திய போதை,,
ஆம், ஓர் வித புது போதை தான்,,
போதைக்கு அடிமையாகி கிடந்த அந்த நாட்கள்,,
போதை தெளிந்து வாழ்க்கை பாதை அரிந்த பின்னும்,,
மீண்டும் அந்தப் போதை மயக்கத்தில் தள்ளாட விரும்பும்
சிறு அடியன்.....,,,,

எழுதியவர் : யூனுஸ் (26-Feb-20, 11:15 am)
சேர்த்தது : mohamed yunus
பார்வை : 264

மேலே