உன் கையில் சமூகம்

உன் கையில் சமூகம்
சென்ற இடமெல்லாம் சிறப்பு நல்கும் !
‘உன் தாய் மொழியில் கல்வி கற்றிடு .
தாய் மொழி கல்வி அவசியமா என்பார்கள் ?
தாய் மொழி கல்வி அவசியமா என்பார்கள் ?
‘மொழி அறியா மூடர்கள் ..,
விழித்தெழு உறங்கியது போதும் ,
விழித்தெழு உறங்கியது போதும் ..,
தமிழ் மொழிக்கு நிகரான நேரத்தை விரையமாக்கது உழுது முன்னேறு ..,
‘’சோதனைகளை சாதனைகளாக மாற்ற தயங்காதே ,
எதையும் கண்டு அஞ்சி ஓடாதே ஒருபோதும் !
ஓடுவது என்று முடிவெடுத்தல் துரத்திக்கொண்டு ஓடு
வேற்று மொழியை அகற்றி அல்ல ...,
அதையும் அரவணைத்து.
நம் தமிழ் வழியே பயிலு மற்ற மொழி சிறப்பை ...,
நம் தமிழ் வழியே பயிலு மற்ற மொழி சிறப்பை .,
நாம் சமூகம் சளைத்தவர் அல்ல வந்தறையும் வாழவைத்தவர் என்பதை நினைவில் கொள் ,
மறந்து விடாதே !
சமூகவலை உன் கையில் அதை கொண்டு உனக்கென மட்டும் வாழதே !!!
பிறருக்கும் வாழு ...,
உன் கையில் சமூகம் !!!
உலகம் உன்னை புரட்டி பார்க்க நினைக்கும் புறம் காட்டாதே ..
உலகம் உன்னை புரட்டி பார்க்க நினைக்கும் புறம் காட்டாதே ..
புறம் பேசுவதை காதில் வாங்கதே !
அவமானங்களை கண்டு ஆழ்ந்து போகதே ...,
அறிவு கணினியில் இல்லை உன்னுள் என்பதை மறவாதே
அறிவு கணினியில் இல்லை உன்னுள் என்பதை மறவாதே ...,
தோல்வியை கண்டு தொலைந்து போகதே
தோல்வி என்றும் நிரந்தரமில்லை என்பதை மறந்து போகதே ...,
வெற்றி உன்னுள் இருப்பதை கலைத்து விடாதே !
உன் கையில் சமுகம் !!!
உற்று பார் ....,
உன் கையில் ஒன்றும் இல்லை என்பது உனது மூடத்தனம் ...,
பத்து விரல்கள் !!!
அதுவே உன் வெற்றியின் மூலதனம் !
முயற்சித்து பார் !!!
கருங்கல் கூட நொருங்கி விடும் ...!
இந்த சமுதாயமே உன் கையில் அடங்கி விடும் !
முயற்சியை கைவிடாதே ...!
தோல்வியடைந்தால் விரக்தி வலையில் துவண்டு விடாதே ..,
நம்பிக்கை என்ற சூரிய நெருப்பை கொண்டு
விரக்தி என்ற வலையை எரித்துவிட தயங்காதே ...,
ஒரு போதும் !
சமூகம் உன் கையில் !
நினைவில் கொண்டு செயல் படு ...,
சமூகத்தை உயர்த்த தாய்மொழி
வழியே கல்வி கற்று நீ சிறந்து வாழ்ந்துடு ..,
உனது முன்னேற்றம் நமது முன்னேற்றம் என்பதை அறிந்து செயல் படு ...
உன் கையில் சமூகம் !!!
பூத கண் கொண்டு பார் இந்த பாரினை !!
எண்ணற்ற வளர்ச்சிகள் !
அகலமான சாலை வசதிகள் !
சாலை ஓரம் இயற்கை ஓவியங்கள் !!
அழகு கண்ணை ஆர்பரிக்கும் அழிவு ...!
எண்ணி பார்க்க முடியாத அளவுக்கு மதுக்கடைகள்
சாலை ஓரம் !!!
சமுக வலை தளங்களில் உறங்காது எழுந்து பார் ..!
இல்லையேல் நாளை அறிய பொருளாக அருங்காட்சியகத்தில் நமது சமூக பாரம்பரிய பொக்கிஷங்கள்
உன் பார்வையில் ...!
போனது போகட்டும் ...,
'கடந்ததை பற்றி வருந்தாதே!
வருவது பற்றி கற்பனை செய்யாதே!
நிகழ்வதை திறம்படச்செய்!
வாழ்க்கை வேறு எங்கேயும் இல்லை. இங்கேயே இதோ
உங்கள் கைகளில்தான்
உள்ளது. இனி... உன் வாழ்க்கை உன் கையில்!
இன்றே உழுது வாழ தயங்காதே ,வேறுமொழிமோகம் கண்டு மயங்காதே சமூகம் உன் கையில் மொழி வளர்ச்சி உனது வளர்ச்சி உன் கையில் உள்ள சமூகத்தின் வளர்ச்சி .
-ப.சிவமணி .

எழுதியவர் : சிவமணிபரசுராமன் (29-Feb-20, 11:53 am)
சேர்த்தது : சிவமணி பரசுராமன்
Tanglish : un kaiyil samoogam
பார்வை : 186

மேலே