அவள் மண்ணில் வரைந்த வண்ணக்கோலம்

அவள் தன்னை மறந்து மனம் முழுதும்
ஒன்றி மண்ணில் தன் அழகிய வெண்டை
விரல்கள் கொண்டு கோலம் வரைகின்றாள்
வரைந்து முடித்த கோலம் இதோ என் கண்முன்னே
அழகிய இதழ்கள் அத்தனையும் விரிந்து அலர்ந்த
தாமரைப்பூ தண்டிலிருந்து தண்ணீருக்கு மேல்
தலை நிமிர்ந்து இருக்கும் வண்ணக்கோலத்தில்...
ஆம், உள்ளத்தில் கல்மிஷமேதுமில்லா முனிவர்போல்
நிமிர்ந்து பூத்த நிர்மலமான கமலமலர் அது...
இதை கோலமாய் வரைந்த இவள் உள்ளம் அல்லவா
இவள் மண்ணில் வரைந்த கோலம் .... என்று
என் மனம் சொல்லியது .... எந்தன் காதலி
அவள் உள்ளத்தைப் பற்றி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (29-Feb-20, 12:53 pm)
பார்வை : 90

சிறந்த கவிதைகள்

மேலே