என் தேவதை நீ
உள்ளம் குளிர்ந்து கிடக்குதடி
உன்னால்
எப்போதாவது உண்மையுடைத்துப்பேசும் நீ
இன்று
உயிருடைத்துப்பேசினாய்..
லயித்துப் போனேன்
உணர்ச்சிப் பிழம்பாய்
மொழியை உருக்கி நீ அனுப்பிய
சொற்கள்
அப்பட்டமாய் உன்காதலை உரைத்துவிட்டதடி
அக அழகினை ரசிப்பதாய் கூறுகிறாய்..
அகமே
நீயாகிக்கிடப்பதை எப்படி உனக்குக் காட்டுவேன்..
நீயாகிக்கிடப்பதாலேயே அகம் அது
அழகாகிக்கிடக்குதடி..
என் தேவதை நீயென்று
ஓராயிரம் முறை சொல்வேன்
ஏனென்றால்
தேவதைகள் உன்போல் மட்டுமே
இருக்கமுடியும்..
உலகப்பெண்மைக்கு இலக்கணம் வரைந்தால்
உச்சாணியில் நீயிருப்பாய்..
ஆவலுடன் காத்திருந்தால் நிலவினைப்போல் காட்சி தருகிறாய்...
ஓ..
நிலவென்று நிரூபணம் செய்கிறாயா...
தூரத்துக்கனவாய்
கண்களுக்குள் நின்றுகொள்..
எப்போதும் ஒரு பேரன்பு
உனக்கு வழங்கப்பட்டுக்கொண்டே இருக்கப்படும்.
Rafiq
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
