இசைஞானி---பாடல்---

பல்லவி :

ஏழிசை ராகமே... நெஞ்சில்
ஏற்றி வைத்த... இசை தீபமே... (2)

அன்னக் கிளியினில் தொடங்கி வைத்தாய்
பல வண்ண மலர்களைப் பூக்க வைத்தாய்...
சின்னக் குயில்மொழி கேட்க வைத்தாய்
உன் இசையில் உயிரினை உருக வைத்தாய்...

ச ரி க ம ப த நி... சரித்திரம் வியக்கும்
சமத்துவ இசை நீ... (2)

ஏழிசை...


சரணம் 1 :

சந்தோசம் தந்திடவே வந்த சங்கீத தென்றலே
உண்டாகும் சந்தங்களில் அந்த மண்வாசம் பொங்குதே... (2)

அசையும் உயிர்கள் உறைந்து போகும் - உன்னால்
இறந்த உயிர்கள் பிறந்து வாழும்... (2)

உன் விரல்கள் மீட்டிடும் இன்னிசையில்
என் இதயக் கதவுகள் திறந்திடுதே...
உன் குரலைக் கேட்டிடும் நொடி பொழுதில்
என் இதயம் கவலைகள் மறந்திடுதே...

ராகதேவா நாளும் நீ வா
எங்கள் சோகம் மாறவே...
வானம் போலே ராகம் நீ தா
எங்கள் தாகம் தீரவே...

ஏழிசை...


சரணம் 2 :

தெய்வீக மெட்டுகளோ?... நெஞ்சைப் பூப்போல மாற்றுதே
கல்லாத உள்ளத்திலும் சென்று கற்பூரம் ஏற்றுதே... (2)

உணர்வில் கரையும் உயிரின் கீதம் - உன்னால்
உலகம் அறியும் இசையின் வேதம்... (2)

தமிழ் இனத்தைத் தாங்கிடும் உன் உருவம்
கலை மகளின் புகழினை உயர்த்திடுமே...
தினம் ஒதுங்கி வாழ்ந்திடும் பறை இசைக்கு
திரை இசையில் தனியிடம் கொடுத்திடுமே...

வாடும் போதும் பாடல் தாராய்
துன்பம் தூரம் போகுதே...
பாடலாலே தாயும் ஆனாய்
இன்பம் யாவும் சேருதே...

ஏழிசை....


...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு...

எழுதியவர் : இதயம் விஜய் (9-Mar-20, 9:23 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 78

மேலே