இனிய காலை நேரம்
உதய வானைக்கண்டு மகிழ்ந்திட ஆசை
கிழக்கு கடற்கரையோரம்
வந்தடைந்தேன் ..... இரவும் கழிந்தது
கிழக்கும் மெல்ல வெளுத்திட இருள் கழிந்த
நீலவானம் கண்ணுக்கு குளுமை தந்தது
பரந்த கடலிற்கப்பால் அடிவானம்
என் மனத்தைக் கவர்ந்தது
தீட்டிய காவி கோடுபோல் காட்சிதந்தது
அடிவானம் நீல ஆடைக்கு பட்டு ஓரம்போல் ..
ஆஹா .... இதுவல்லவோ இத்தனை நாள்
நான் காணத்துடித்த அந்த அற்புதக்காட்சி
அடிவானத்திற்கு பின்னிருந்து மெல்ல
மெல்ல வானில் காலடி வைத்தான்
பகலுக்கு அதிபதி ஆதவன்.....
மாலவன் சக்கரம் சுழல்வதுபோல்
அடிவானம் மேலே அழகிய ஆரஞ்சு நிற கோளம்
ஆர்ப்பரிக்கும் சமுத்திர அலைகள்
ஓமென்று சூரியனுக்கு வந்தனம் செய்ய
கடற்கரைக்கு அப்பாலிருந்து சோலைக்குயில்
கீதம் இசைத்தது காளையின் ராகம் அது
பிலஹரியாய் என் காதில் வந்து சேர்ந்தது
இல்லம் திரும்புகையில் குயிலின்
இசை கல்யாணியாய் மாறி இருந்தது
என் மனம் குளிர வீட்டின் எதிரே
கோயில் குளத்தில் போது குலுங்கியது கமலம்
இனிய காலை நேரம் நினைவில் நின்றது