அவள்
அவள் வள்ளி
அவளால் பிறந்தது
என் வாழ்வில் விடி வெள்ளி
தமிழுக்கு அமுதென்று பேர்
அவளுக்கு அமுதா என்று பேர்
அவள் மண்ணில்
பிறந்த அவதாரம்
இறைவா
எனக்கு ஆகவேண்டும்
அவ தாரம்
அவள் நதியா
காய்ந்து கிடந்த
என் காதல் தேசத்தில்
பசுமை செய்ய வந்தாள் நதியா
அவள் கமலா
அவளிடம் என்றும்
நான் நடித்ததில்லை கமலா
அவள் ராசாத்தி
இந்த ராசாவின்
மனதில் வைத்தால் தீ
அவள் கிளின்டன் மகள்
நான் ஒரு ஏழை
கிளி ஜோசியக்கா ரனின் மகன்
அவள் கிளியோபாட்ரா
வளர்த்த கிளி
அந்தக் கிளியை கூண்டில் அடைக்க நினைத்தவர்கள் அனைவரும்
இன்று உண்கின்றனர் களி
இறைவா
என்னை அவள் வீட்டுக்காராகத்தான் ஆக்கவில்லை
அவள் வீட்டு காராகவாவது மாற்று அவளோடு நான் பயணிக்க....