இங்கு உண்மை என்பது ஏது
எல்லாம் இங்கு மாயை
அதுவும் ஓர் நாள் மாறும்
என உணர மறுக்கும் மனம் இது
இதை உணராமல் அமைதி சாத்தியமாவது ஏதுjQuery171005169594535461086_1583881467501
சொந்தம் ஏது ..பந்தம் ஏது..
பணம் காசு இல்லையெனில்
உற்றார் உறவு இங்கு ஏது??
சொத்து வந்தும், சுகம் வந்தும்,
எல்லாம் எனக்கே என்று
எண்ணி எண்ணி பதுக்கும் மனதில் நிம்மதி என்பது ஏது..??
காதல் ஏது, கனிவு ஏது,
காலம் நடத்தும் நாடகத்தில்
உனது என்று ஒன்று இங்கு ஏது..??
நன்மை பல செய்தும்.. பிற உயிரை நேசித்தும் ..
நன்றாய் வாழ்ந்த மனிதன்
என்று இங்கு யாரு ??
திறமை உண்டு.. முயற்சி உண்டு.. நல்மனம் உண்டு.. உழைப்பு உண்டு.. எல்லாம் இருந்தும் அதிர்ஷ்டம் இன்றி
கனவு மெய்ப்படுவது எப்பொழுது...??
நல் நோக்கமின்றி நிலையற்ற
ஆசை மோகத்துடன்
திரிந்து அலையும் மனதை
ஈசன் ஆட்கொள்வது ஏது..??
எல்லாம் இங்கு மாயை
அதுவும் ஓர் நாள் மாறும்..
என உணர மறுக்கும் மனம் இது
இதை உணராமல் அமைதி சாத்தியமாவது ஏது??
என்றும் என்றென்றும்...
ஜீவன் ✊✊