சத்தியம் ஒன்று செய்யவா

என்னை சுமந்து வாழும்
உந்தன் இதயத்தின் மீது..

இமைக்குள் வைத்து காக்கும்
உந்தன் கண்கள் மீது..

அன்போடு அரவணைக்கும்
உந்தன் அணைப்பின் மீது..

அள்ளித்தரும் உந்தன் முத்தத்தின் மீது..

கொட்டித்தீர்க்கும் உந்தன் கோபத்தின் மீது..

முக்கனி சுவை தரும்
உந்தன் இதழ்கள் மீது..

விழும் போது தாங்கும்
உந்தன் கைகள் மீது..

அழும் போது ஏங்கும்
உந்தன் உள்ளத்தின் மீது..

சத்தியம் ஒன்று செய்யவா?

வாழும் காலம் வரை
கண்ணே உன்னை காதல் செய்வேன் என்று
உன் மீதும்
நான் சத்தியம் ஒன்று செய்யவா!?

❤️சேக் உதுமான்❤️

எழுதியவர் : சேக் உதுமான் (10-Mar-20, 1:37 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
பார்வை : 963

மேலே