இரவினை எரிப்போம் வா

என் இரு கரம் பற்றி
இறுக்கி கொள்ளடி...
இரக்கமின்றி என்னை
உன் மார்போடு அள்ளிக் கொள்ளடி...
தயக்கமின்றி என்னை
உந்தன் மடியினில் தாங்கிக் கொள்ளடி..

பெண்ணே!
பகலை அணைத்து
இரவினை எரிப்போம் வா!
பசியோடு இருக்கும்
நம் காதலுக்கு
தித்திக்கும் முத்தங்களை
காணிக்கையாக்குவோம்
நம் இதழோடு இதழ் சேர்த்து
இவ்விரவு முடியும் வரை...!

❤️சேக் உதுமான்❤️

எழுதியவர் : சேக் உதுமான் (10-Mar-20, 1:42 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
பார்வை : 658

மேலே