கண்ணாடி இதயம்

கண்ணாடி இதயம் ...
கண்ணாடி இதயம்
கண்ணாலே உடைந்தது
சிதறிய சில்லில் எல்லாம்
அவள் முகமே தெரிந்தது
அழகிய முகம் திசைகள் நான்கும்
இனிய குரல் கேட்க - அந்த
இசையும் ஏங்கும்
விழிகள் செய்யும் ஜாலங்கள்
விடியலில் புதிய ராகங்கள்
வானவில்லோ அவளின் நிறம்
ஒருமுறை பார்த்தால்
பாரம் ஓடும் தூரம் - அவளின்
சிறுநகைக்குள் சிறைப்பட்டேன்
அந்த சின்ன சின்ன விழிகளுக்குள்
சிக்கிக்கொண்டேன்
விழி காக்கும் இமையாய்
மண் மணக்கும் மழையாய்
நா உணரும் அறுசுவையாய்
நலம் கொடுக்கும் நகைச்சுவையாய்
உசுர காற்றாய் என்னவள்
எல்லாம் அவள்.

இவன் மு. ஏழுமலை

எழுதியவர் : மு. ஏழுமலை (10-Mar-20, 3:55 pm)
சேர்த்தது : மு ஏழுமலை
Tanglish : kannadi ithayam
பார்வை : 314

மேலே