வாழ்த்து

உறவுகள் மிகவும் அழகு
பிறப்பில் பல உறவு
வளரும் போது பல உறவு
அன்பால் பல உறவு
அரவணைப்பால் பல உறவு
அனைத்தையும் ஏற்று வாழ்

நாம் நாமாக வாழ
எத்துணை தடை
எத்துணை அனுசரிப்பு
எத்துணை இழப்பு
எத்துணை தவிப்பு
ஆனாலும் வாழ்கிறோம்....

பலவற்றை ஏற்க மறுகிறோம்
பலவற்றை இழக்க மறுக்கிறோம்

வாழ்வில் சில நொடிகள்
மிகவும் அற்புதமானவை..
சில நொடிகள் மிகவும் வேதனை
தருபவை..

அத்துணை தருணங்களிலும்
சமமாய் ஏற்று வாழ்
அத்துணை நிமிடங்களுக்கு உனதே
அத்துணை வெற்றியும் உனதே

பகிர்ந்து கொள்ள ஒரு துணை
வாழ்க்கை பயணத்தில் ஒரு துணையுடன் வெற்றிகள் பல பெற்று
புகழுடன் வாழ வாழ்த்துக்கள்.......

எழுதியவர் : உமா மணி படைப்பு (11-Mar-20, 1:03 pm)
சேர்த்தது : உமா
Tanglish : vaazthu
பார்வை : 121

மேலே