நிலவும் நாணும்
கருவிழி இரண்டும் வண்டன்றோ!
கன்னம் இரண்டும் கனியன்றோ!
செவ்விதழ் ரோஜா மலரன்றோ!
சிரிக்கும் வதனம் சிறப்பன்றோ!
தாய்மை உந்தன் வடிவன்றோ!
தரணியில் உனக்கொரு நிகரன்றோ!
பேசும் மொழியது தேனன்றோ!
பாசம் உந்தன் சிறப்பன்றோ!
உன்னால் நிலவும் நாணுமன்றோ!
நின்எழில் எனையே சாய்க்குமன்றோ!
பாராமுகமாய் இருத்தல் நன்றோ!உன் அன்பால் அமைந்ததென் வாழ்வன்றோ!