காதலியே

என்னுடைய விடுமுறை நாட்களில்
நான் விரும்பாமலேயே
உனக்கான கதவுகள் மூடிக்கொள்கின்றன
உன்னுடனான உரையாடல்கள்
அநாதரவாய் அலைகின்றன
நமக்கிடையேயான இடைவெளி
பல்லாயிரக்கணக்கான மைல்கள் நீள்கின்றன
இந்தப்பொழுதுகளில் நீ
உனை மறந்துவிட்டதாய் நினைக்கிறாய்
உனை தவிர்த்துவிட்டதாய் புலம்புகிறாய்
உன் அன்பினை உதாசீணப்படுத்தியதாய் சீறுகிறாய்
உன்னோடு பேசுவதில்லை என
சபதமிடுகிறாய்
நான் அப்படியல்லவென்று அறிந்திருந்தும்
கடுங்கோபம் கொள்கிறாய்..
மன்னிப்புக்கேட்டுக்கொள்ள அவகாசம் தருதல்
உனது அகராதியில் இல்லை..
இருப்பினும்
மன்னிக்க வேண்டுகிறேன்.
உன் பெருங்கோபத்தின் வேரில்
ரசித்துக்கொண்டிருக்கும்
இளமைக்காதலை நான் அறியாதவனா..??
விடுமுறை நாட்களை சபித்து வெறுக்கும்
மற்றுமோர் ஆடவன்தான் நான்
உன் நினைவுகளால்
உனக்கு தெரிவிக்கிறேன்
நாம் நேசிக்கிறோம் என்கிற
உண்மையினை..

Rafiq

எழுதியவர் : Rafiq (13-Mar-20, 7:47 pm)
சேர்த்தது : Rafiq
Tanglish : kathaliye
பார்வை : 203

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே