நாணம்
அவள் மனதில்
மகிழ்ச்சி வந்தது
அழகாய் இருந்த
வானத்தைப் பார்த்து
சட்டென்று பார்த்தால்
வானவில்லே இறங்கி
வாசலுக்கு வந்தது - அவளது
நாணத்தைப் பார்த்து
மலர் மலர்வதை
பார்த்துக் கொண்டே
மகிழ்கிறேன்
அவள் வெட்கப்படும்
ஒவ்வொரு தருணத்திலும்.

