அன்பே
நீ நினைத்துக்கொண்டிருப்பாயா
நான் உன்னை சிந்திப்பதை
உணர்ந்திருப்பாயா
உன் பெயரை கவிதையாய்
கோர்த்து வைத்ததை அறிந்திருக்கிறாயா..
எனக்கான செய்திகளையும்
அறிவுரைகளையும்
காதலையும்
முத்தங்களையும் சேமித்த கனம்தாளாமல்
திணறுகிறாயா..
உனக்குள் துளிர்விட்ட அன்பு
என்னை தவிக்க வைப்பதை
உனக்கு தெரிவிக்கிறேன்..
ஒருவேளை நீயும்
தவித்திருந்தால்
கொஞ்சம் சிரித்துக்கொள்வோம்..
Rafiq