வெட்கம்
எத்தனையோ உணர்வுகளை
இதுவரை கண்டிருந்தேன்...
இப்படியோர் வெட்கத்தினை
இதுவரை கண்டதில்லை....
அப்படியோர் வெட்கம்....
இது காணகிடைக்கா காவியம்
கண்ணுக்குள்ளே உன் ஓவியம்...
வெட்கம் என்பது உணர்வா.... அதை
உணர வேண்டும் தலைவா....
இன்னொரு முறை உன் வேல்விழி
பார்வையை என்மேல் வீசிவிட்டு போ.....
அதிசயமே அசந்து போகும்
இந்த அதிசயமாவது
அடிக்கடி நிகழட்டும்....