படுக்கையில் கிடத்தி

எவ்வளவு பெரிய உருவத்திற்கு
எவ்வகை வடிவில் இயங்குதோ உயிர்
இருதயம் நுரையீரல் மூளை என
பலவடிவ பாகங்களால் உடல் இயங்க
எலும்பு நரம்பு தோல் இரத்தமென
பல வகை ஊக்கிகள் உடலைக்காக்க
அறுசுவை உணவுக் காரணிகளால்
ஐம்பூதங்களை உட்கிரகித்து உடல் வாழ
எவ்வகையில் உயிரென்ற ஒன்று
உடலை இயக்கி உற்சாகமாய் உள்ளதோ
பசி கோபம் ஆசை இச்சையைத் தூண்டி
பகட்டு பம்மாத்து பாசம் எனப் பலவற்றோடும்
உலா வரச்செய்யும் காரணியின் பெயர் உயிரென்றால்
ஒவ்வாமையால் உடல் நலிவுற்று மெலிந்து
நோய் பெருகி பலவாகி பலவந்தமாய்
பரவி பலரை பாதித்து பாடுபடுத்தி
படுக்கையில் கிடத்தி பலமாகும் போது
உயிரென்ற ஒன்று போராடி வெல்லாதோ
உருவில்லா ஒன்றோ உயிர் இல்லை வெற்றுக்காற்றோ
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (23-Mar-20, 9:36 am)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : padukkayil kidathi
பார்வை : 98

மேலே