தனித்திரு
காதலன் காதலிக்காக
காதலி காதலனுக்காக
தனித்திருங்கள் - காதலோடு !
கணவன் மனைவிக்காக
மனைவி கணவனுக்காக
தனித்திருங்கள் - அன்போடு !
பெற்றோர் குழந்தைகளுக்காக
குழந்தை பெற்றோருக்காக
தனிமை பொறுத்திருங்கள் - நலன் கருதி !
நண்பன் தோழனுக்காக
தோழன் நண்பர்களுக்காய்
தனித்திருங்கள் - நட்போடு !
தொண்டன் தலைவனுக்காக
தலைவன் தொண்டனுக்காக
தனித்திருங்கள் - நன்மைகருதி !
முதலாளி தொழிலாளிக்காக
தொழிலாளி முதலாளிக்காக
தனிமையோடு காத்திருங்கள் - விடியல் கருதி !
கோவில் பக்தனுக்காக
பக்தன் கோவிலுக்காக
காத்திருக்கட்டும் - இறைவன் துணையோடு !
மௌனம் பேசட்டும் - இயற்கை பேசட்டும்
இன்றய தனிமை - நாளைய நம் தலைமுறைக்கு
நல்லதை அள்ளித்தரட்டும் !!
மறந்து போன பாட்டி மருத்துவம் இன்றே
அனைவர் இல்லத்திலும் துளிர்க்கட்டும் !
நவ பாரதம் நம் முன்னோர்களின்
வாழ்வு முறையை கற்றுக்கொள்ளட்டும் !!!
காற்றையும் நேசமாய் சுவாசித்திடும்
வாழ்வியல் வழிமுறைகளை ...
வலி இல்லா வாழ்வை காணும்
வாழ்வியல் நெறிமுறைகளை
கைக்கொள்ளட்டும் !!