தாலாட்டு

கருசுமக்கும் தாயவளைக்
கனிவாகச் சீராட்டு !
உரமூட்டி உணவூட்டி
உளமாரப் பாராட்டு !
அரவணைத்துத் தலைநிறைய
அன்போடு பூச்சூட்டு !
வரவிருக்கும் புத்துயிரை
மகிழ்வோடு தாலாட்டு !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (27-Mar-20, 1:19 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 28

மேலே