தீயணைப்பு வீரர்கள் தின கவிதை
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*தேசிய தீயணைப்பு*
*வீரர்கள் தினம்*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
முப்படை
"தீ "யவர்களிடமிருந்து
நாட்டை க் காப்பாற்றுகிறது
இப்படை
" தீ "யில் இருந்து
வீட்டைக் காப்பாற்றுகிறது....
இப்பணியில்
"நீருக்கும்
நெருப்புக்கும்" இடையே
நடைபெறும்
போட்டி மட்டுமல்ல...
பணியாற்றுபவரின்
"வாழ்வுக்கும்
சாவுக்கும்" இடையில்
ஒரு போராட்டமும் நடக்கிறது...
சிங்கம்
புலி
காளையை
அடக்குபவர்களை விட
இந்த "நெருப்பை"
அடக்குபவர்கள்
மிகவும் வீரமிக்கவர்கள் தான்....
ஏனெனில் ?
இந்த நெருப்பு
சிங்கம் புலி
காளையைக் கூட
கண நேரத்தில்
"சாம்பலாக்கிவிடும்
சக்தி கொண்டது......!"
"யானை வரும் பின்னே
ஓசை வரும் முன்னே" என்று
சொல்வார்கள் ....
இவர்கள் வரும் முன்னரும்
மணியோசை வருகிறதே...!
ஓ.....!! இவர்கள்
"யானை பலம்
கொண்டவர்கள் என்பதனாலோ?"
பஞ்சபூதங்களில்
ஒன்றான
நெருப்பும்
இவர்கள் துணிவுக்கு முன்னால்
மண்டியிட்டு விடுகிறது....
ஆம் ....!
இதுவரை இவர்களால்
அணைக்க முடியாத
தீ என்று எதுவும்
இருந்ததில்லை.....!
இவர்கள்
வேலை செய்யும்
வேகத்திற்கு முன்னால்
ஒளியின் வேகம் கூட
ஒருவேளை
தோற்றுப் போகலாம்....
தீயில் சிக்கி
சாம்பலாகலாம்....
கட்டிடம் இடிந்து விழுந்து
சவமாகலாம்.......
இடிபாடுகளுக்கு
இடையில் சிக்கி
ஊனம் ஆகலாம்.....
ஆனால்
இவர்களோ !
"உச்சி மீது
வானிடிந்து
வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை" என்ற
பாரதியார் பாடலுக்கு
உதாரணமாகிப் போனார்கள்.....
தெய்வம்
நேரில் வராது என்று
சொல்வார்கள்....
உண்மைதான்
"இவர்கள் போன்ற
உருவில்" தான் வரும்....!!!
♥ _தேசிய தீயணைப்பு வீரர்கள் தின நல்வாழ்த்துகள்_ ♥
*கவிதை ரசிகன்*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥