42 வாய்க்கும் நலங்களெல்லாம் செய்து ஆள்பவன் மன்னன் – அரசியல்பு 6

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)

சத்திரஞ் சோலை சாலைகள் குளங்கள்
..தண்ணதி மதகொடா லயங்கள்
வித்தியா சாலை மாடகூ டங்கள்
..வேறுவே றமைத்துவே ளாண்மை
சத்திய மகலா வாணிக மாதி
..சகலநற் றொழிலவ ரவர்கள்
நித்திய முயல வித்திசை புரக்கு
..நிருபனே நிருபனா மன்றோ. 6

– அரசியல்பு
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”அன்னச் சத்திரங்கள், பூங்கா, சாலைகள், குளங்கள், குளிர்ந்த நதிகளும் அவற்றைச் சார்ந்த மடைகள், கோவில்கள், கல்விச்சாலைகள், மாடகூடங்கள் என வேறுவேறாக அமைத்து, வேளாண்மை, அறநெறிக்குக் கட்டுப்பட்ட வாணிகம் முதலான சகலவிதமான நல்ல தொழில்கள் அவரவர்கள் நாளும் பெருக வேண்டுவன செய்து காப்பவனே வேந்தன் ஆகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

சத்திரம் - அன்னச் சத்திரமும், தங்குமிடமும், புரத்தல் – காத்தல், நிருபன் - வேந்தன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Mar-20, 11:25 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே