வெல்வோம் கொரனாவை

கண்ணுக்குத் தெரியாமல் காற்றில் மணத்தை பரப்புவதற்கு பதிலாக மரணத்தைப் பரப்பும் நச்சுயிரியே
பிறந்தவுடன் பெயர் வைப்பார்கள்
ஆனால் நீ பலரை கொன்று கொரனா என பெயர் பெற்றாய்
தொற்றும் தன்மை கொண்ட உனக்கு தொட்டில் கட்டியது யார்-சீன தேசமா
நாளுக்கு நாள் வளரும் நீ தேய்வது எப்போது, உழைக்கும் மக்களை உள்ளே அடைத்தாய் வியர்வைத் துளியை பறித்து கண்ணீர்த்துளி தந்தாய், உழைக்கும் நெஞ்சம் பதபதைப்பது உன்னால் அல்ல உழைக்காமல் உண்ணும் ஒவ்வொரு நாளை கண்டு,விடியும் ஒவ்வொரு நாளும் மடியும் எண்ணிக்கை அதிகமானது,புதைபடும் சடலம் ஆழமானது, விலங்கிடமிருந்து பரவியதால் விலங்காய் போனாயோ,
கைவிலங்கு போட்டாயோ
ஆறறிவு கொண்ட மனித இனம் அழுவது உன்னால்,அழும் நாங்கள் எழும் நாள் தூரமில்லை
இன்றைய நாள் தோற்றாலும்
நாளை எங்கள் விடியலே
முயன்று வெல்வோம்
முயற்சிதான் எங்கள் முதல் வெற்றி
முயலும் எண்ணமே எங்கள் பதக்கம்
இப்பதக்கம் நெஞ்சுறுதி கொண்ட எங்கள் உள்ளத்தினுள் உள்ளது
வெல்வோம் ஒன்றாக

எழுதியவர் : கவிதையின் எழுதுகோல் (29-Mar-20, 9:55 pm)
பார்வை : 42

மேலே