வல்லினப் பாட்டு

"முற்றவும் வல்லின எழுத்துகள் அமையும்படியாக ஒரு செய்யுள் செய்க" என்று ஒருவர் கேட்கப் பாடியது இது.

நேரிசை வெண்பா

துடித்துத் தடித்துத் துடுப்பெடுத்த கோடற்
றொடுத்த தொடைகடுக்கை பொற்போற் - பொடித்துத்
தொடைபடைத்த தோடுடித்த தோகைகூத் தாடக்
கடிபடைத்துக் காட்டித்துக் காடு. 73 - கவி காளமேகம்

பொருளுரை:

காந்தள் முகிழ்த்தனவாய் ஒளிகொண்டவாய் அரும்புகளை எடுத்தன; கொன்றைகள் பொன் போன்று ஒளிறும் மாலைகளைத் தொங்கவிட்டன; வளைகளை அணிந்தவையான தோள்கள் சிலிர்த்துத் துடிதுடிப்பவை ஆயின; மயிலினம் கூத்து ஆடத் தொடங்கின; இப்படியாக காடே தனக்கொரு மணத்தினைப் படைத்துக் கொண்டதாகத் தன்னைக் காட்டலாயிற்று.

இவை எல்லாம் கார் காலம் தொடங்கிற்று என்பதனால் ஏற்படும் நிகழ்ச்சிகள்.

தோகை கூத்தாட' என்பதனுள் 'கூத்தாடின என்பது கூத்தாட எனத் தொக்கி நின்றது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Mar-20, 8:00 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 38

சிறந்த கட்டுரைகள்

மேலே