மருத்துவ வெண்பா – முருங்கைக் காய் – பாடல் 54

நேரிசை வெண்பா

சொல்லுநோய் கட்கெல்லாந் தோடமிலை ஐயமறும்
பல்லுயிர்க்குத் தாதுமிகும் பத்தியமாம் – வில்லார்
பெருங்கைக்கா மன்றுதிக்கும் பெண்ணே நறிய
முருங்கைக்காய் தன்னை மொழி. 54

குணம்:

பல பிணிக்கும் குற்றமில்லாத பத்தியக் கறியாயுள்ள முருங்கைக் காயால் கபம் நீங்கும்; விந்து கட்டும்.

உபயோகிக்கும் முறை:

இந்தக் காயைச் சிறு துண்டுகளாய் அரிந்து துவரம்பருப்புச் சாம்பாரில் அல்லது புளிக் குழம்பில் போட்டுப் பாகப்படுத்தி உணவுடன் பிசைந்து உண்பதுண்டு. பொரியலாகச் செய்தும் உண்ணலாம். இதனால் குடலுக்குப் பலமேற்படும். வயிற்றிலுள்ள வாயுவை நீக்கும். விந்துவைக் கட்டும். கபத்தை நீக்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Mar-20, 6:12 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 59

மேலே