மருத்துவ வெண்பா – முருங்கை வித்து – பாடல் 55

நேரிசை வெண்பா

நீரான விந்துவுமே நிச்சயமாய்க் கட்டிவிடும்
சீரான மேனி செழிப்பாகும் – நேராய்
நெருங்க மலர்சூடும் நீண்டகுழல் மாதே!
முருங்கை விதையை மொழி. 55

குணம்:

முருங்கை வித்தினால் சலரூபமான இந்திரியம் தடிப்பாகும்; சரீரம் பலக்கும்.

உபயோகிக்கும் முறை:

இதனைத் தாது விருத்திக்குரிய லேகியங்களில் பெரும்பாலும் சேர்ப்பதுண்டு. இதனால் விந்து தடிப்பாகும்; விந்து விரைவில் ஸ்கலிதம் ஆகாது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Mar-20, 7:30 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 55

மேலே