70 கொட்டும் தேனீ போன்றவனைத் தன் உள்ளமும் சிரிக்கும் - பொய்க்குருவின் தன்மை 6

கலி விருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. (முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

வாயில் தேனுந்தன் வாலிற் கொடுக்குஞ்சேர்
ஈயின் வாயினி லிங்கிதச் சொல்லொடுந்
தீய செய்கையு ளானைத் தினஞ்சிறு
சேயும் எள்ளுந்தன் சிந்தையும் எள்ளுமே. 6

- பொய்க்குருவின் தன்மை
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”வாயில் தேனும், அதன் வாலில் கொடுக்கும் முன் பின் அமைந்த தேனீயைப் போன்று வாயில் இனிய சொல்லும் செயலில் கொடுஞ்செயலும் உள்ளவனைத் தினமும் சிறு பிள்ளைகளும் இகழ்வர். அவனுடைய உள்ளமும் இகழ்ந்து சிரிக்கும்” என்கிறார் இப்பாடலாசிரியர். .

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Mar-20, 2:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 37

மேலே