69 பொருளாசை உள்ளவன் அருள் ஆசான் ஆகான் - பொய்க்குருவின் தன்மை 5

கலி விருத்தம்

சொன்னாத் திருட’ன்’சிறு கள்வனைத் தூரியேசல்
என்னப் பொருளாசை யுளான்பிறர் இச்சைதீர்ந்து
மன்னத் திருஞான முரைத்தன்மற் றோர்துறக்கும்
பொன்னைக் கவரச்செயும் வஞ்சனை போலுமாதோ. 5

- பொய்க்குருவின் தன்மை
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”தங்கத்தைக் திருடுபவன் குறைந்த மதிப்புள்ள சிறு பொருளைக் களவு செய்பவனைப் பழித்துத் திட்டுவான். பொருளின் மேல் ஆசை உள்ளவன், பிறரது இச்சை தீர்ந்து மெய்யுணர்வு பெற பிறர்க்குத் துறவு ஞானம் போதிப்பது அது போன்றதேயாகும். மேலும், பிறர் துறக்கும் பொன் பொருளைத் தான் கவர்ந்து கொள்ளும் வஞ்சனை போன்றது அல்லவா” என்கிறார் இப்பாடலாசிரியர்.
.
சொன்னம் - தங்கம்; பொன். திருஞானம் - மெய்யுணர்வு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Mar-20, 1:53 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 46

மேலே