ஒரு நிமிடம் போதும்
வாழ்கின்ற உலகில்
எண்ணற்ற வதைகள்
நிரபராதி மனிதன்
அத்தனையும் தாண்டி
தன் நிலை தளும்பாது
வாழ நினைக்கின்றான்
முடியவில்லையே அவனால்
பணக்காரன் ஏழை பாகுபாடின்றி
பதவியில் பட்டதில் செல்வத்தில்
நின்றவன் இன்று மனிதம்
தேடும் நிலைக்கு வலுக்கட்டாயமாக
தள்ளப்பட்டு சாதாரண மக்களாய்.
எவராலும் அசைக்க முடியா
தொற்றுக்கு கிருமியினால்
அலைக்கழிக்க படுகின்றான் மனிதன்
மனிதனே நீ இன்னுமா தெரிந்து கொள்ளவில்லை
இவன் தான் மனிதன் என்று
/ மனிதன், மனிதன், மனிதன்
அக்கிரமும், திமிரும், அடங்காமையும்
கொண்ட மனிதன் எங்கே /
இன்று கூண்டுக்குள் கிளியாக தனிமைச் சிறையில்
மதவெறி பிடித்து மனிதனை மனிதன்
கீழே தள்ளும் நிலையில் இன்று உயர்ந்தவன் எங்கே/
தாழ்ந்தவன் எங்கே /
எல்லோருக்கும் நிலை ஒன்றுதான்
அரசனும் ஆண்டியும்
ஆண்டவன் முன்னிலையில் சமமமே ,
அவன் ஆட்டுவிக்கும் கைப் பொம்மைகள் யார் /
விலங்குகளா, பறவைகளா, ஊர்வனவா /
இல்லை, இல்லை மனிதன் மட்டுமே.
இன்னுமா உன் அறியாண்மை நீங்கவில்லை
மனிதா ஆண்டவனின் சாபம் மிக அருகில்
நெருங்கி விட்டது .
இந்நிலை மனிதனுக்கு ஏன்/
தானே பாடுபட்டு தானே சம்பாதித்து
தன் நிம்மதியை தேடி வாழ்பவன் மனிதன்
உலகம் முழுவதும் மனிதன்
தனதாக்கிக் கொண்டாலும்
பிறர் நலம் அவனிடம் இல்லையேல்
அத்தனையும் வீண், பயனற்றது ,
இப்போதாவது சிந்திக்க விளைவாய் மனிதனே
ஒரே ஒரு நிமிடம் போதும்
நம்மைப் படைத்தவன் நினைத்தால்
அழிவின் விளிம்பில் நின்று மனிதனைக் காக்க ,
உலகம் முழுமையும் உடையவன் கரத்தில் .