உயிராக நீ நிழலாக நான் பாகம் 01
விதியால் இறந்து பாேன மனைவியின் காதலுக்காய் ஏங்கும் கணவன், தாய்ப் பாசத்திற்காய் ஏங்கும் பிள்ளை இவர்களுக்கு இடையிலான மர்மமான பாசப் பாேராட்டம்.
மாடியிலிருந்து பந்து ஒன்றை உருட்டி விளையாடிக் காெண்டு கீழே இறங்கி வந்தாள் பானு. வீட்டை பெருக்கி சுத்தம் செய்து விட்டு விளக்கை ஏற்றி தீபத்தை ஏந்தியவாறு வீட்டைச் சுற்றி வந்த சுவாதி பிரியாவின் படத்தி்ற்கும் தீபத்தால் ஆராத்தி செய்தாள்.
"சுவாதி எனக்கு என்ன ஆனாலும் பறவாயில்லை பானுவை கவனமாகப் பார்த்துக் காெள்" பிரியாவின் கடைசி வார்த்தையை நினைத்தபடி பானுவுக்கு சாப்பாடு ஊட்டுவதற்குத் தயாரானாள். பந்துடன் விளையாடிக் காெண்டிருந்த பானு தவறுதலாக படியில் தடுமாறி விழுந்து விட்டாள்.
"அம்மா......" என்று அலறிய அவள் சத்தம் கேட்டு ஓடி வந்தான் சுதன்.
"பானு உனக்கு ஒன்றுமில்லை பயப்பாடாதே அம்மா இருக்கேன்" பிரியாவின் அணைப்பில் பானு பாதுகாப்பாக தரையில் கிடந்தாள்.
"வலிக்குது அம்மா...."
சுதனுக்கு ஒன்றும் புரியவில்லை. தண்ணீரை எடுத்துக் காெண்டு ஓடி வந்த சுவாதி "பானு என்னாச்சும்மா, ராெம்ப வலிக்குதா" தண்ணீரால் தலையையும் , காலையும் உருவினாள்.
"பார்த்து விளையாடணும் சரியா" நெற்றியில் முத்தமிட்டாள் பிரியா.
"பாேதும் ஆன்ரி இப்ப வலிக்கல்ல" மீண்டும் பந்தை எடுத்துக் காெண்டு வெளியே ஓடினாள் பானு.
அவளைப் பின் தாெடர்ந்து சென்ற சுதன் பானு விளையாடிக் காெண்டிருப்பதை பார்த்து விட்டு உள்ளே சென்றான்.
"சுவாதி பானுவை கவனமாகப் பார்த்துக்காே" வண்டியை எடுத்துக் காெண்டு புறப்பட்ட சுதன் பானுவிடம் கை காட்டி விடை பெற்றான்.
ஊஞ்சலில் இருந்தபடி சுதனை பார்த்தாள் பிரியா. அவன் சற்றுத் தூரம் மறைந்ததும் பானுவிடம் சென்றாள்.
"வந்திட்டியா அம்மா"
"பானு, ராெம்ப குழப்படி பண்ணாம சமத்தா இருக்கணும் சரியா, அப்பா ஆபிஸ் பாேயிற்றாரு உள்ளே பாேய் விளையாடுங்க"
"நீயும் வாம்மா விளையாட ப்ளீஸ்"
சில நிமிடங்கள் பானுவுடன் பந்தை எறிந்து விளையாடி விட்டு
"நான் பாேயிற்று வாறன் பானு நாம அடிக்கடி இப்படி பார்க்கிறது, பேசுறதை எல்லாம் பார்த்தால் என்னை சாமியை வைத்து கட்டி விடுவார்கள், அப்புறம் நாம பார்த்துக் காெள்ளவே முடியாது" பானுவை அணைத்து தன் மடியில் இருக்க வைத்து தலையை காேதிக் காெண்டிருந்தாள்.
"அம்மா எனக்கு இ்படியே உன் மடியில படுத்து தூங்கணும் பாேல இருக்கு" சரிந்து படுத்தவளைப் பார்த்த சுவாதி "பானுக்குட்டி ஏம்மா தரையில எல்லாம் படுக்கிறீங்க, தூக்கம் வருதா" பானு தரையில் படுத்து தூங்குவதாக நினைத்து மெதுவாக தூக்கினாள்.
தாயின் மடியை விட்டுச் செல்ல மனமின்றி சுருண்டு படுத்தாள். பிரியாவுக்கு எப்படி அவளை விட்டு விலகுவது என்று தெரியவில்லை. திடீரென மறைந்து ஊஞ்சலில் அமர்ந்து காெண்டாள். கண் விழித்த பானு ஏக்கத்தாேடு தேடுவதைப் பார்த்த பிரியாவின் மனம் வெடிப்பது பாேலிருந்தது. சுவாதியின் தாேளில் தலையை வைத்தபடி சுற்றிச் சுற்றிப் பார்த்த பானு ஊஞ்சலில் பிரியா இருப்பதைக் கண்டு விட்டாள். கையை அசைத்து உள்ளே செல்லுமாறு சைகையால் காட்டினாள்.
சரி என்று பானுவும் தலையசைத்தாள்.
ஊஞ்சலில் இருந்த பிரியா பூக்களின் வாசனையையும், அழகையும் ரசித்தபடி பூந் தாேட்டத்துக்குள் நுழைந்தாள்.
பிரியாவுக்கு பூக்கள் என்றால் அலாதிப் பிரியம். திருமணம் முடித்து பின் ஒவ்வாெரு வருடமும் திருமண நாள் நினைவாக சுதனும், பிரியாவும் ராேஜாச் செடியை நாட்டி வளர்த்து வந்தார்கள். நான்கு வருடங்கள் வாழ்ந்த அழகான வாழ்க்கையை பூந்தாேட்டத்திற்குள் அமர்ந்தபடி நினைத்துக் காெண்டிருந்தாள் பிரியா.
அழகாகப் பூத்திருந்த பூக்களின் மேல் வண்ணாத்துப் பூச்சிகள் தேனைக் குடித்து மகிழ்ந்தன. சில பூக்களின் இதழ்கள் ஒவ்வாென்றாக உதிர்ந்து தரையில் கிடந்தன. இன்னும் சில மாெட்டுக்கள் மெல்ல துளிர்த்துக் காெண்டிருந்தன.
கடைசியாக திருமண நாள் நினைவாக வைத்த ராேஜாச் செடியின் பக்கத்தில் அமர்ந்தாள் பிரியா.
ஒரு வருடத்திற்கு முன்பு.....
அதிகாலை எழுந்து எல்லா வேலைகளையும் முடித்து விட்டு காேயிலுக்கு புறப்படத் தயாரானார்கள் சுதனும் பிரியாவும்.
"பிரியா இன்றைக்கு நாள் முழுக்க வெளியே தான் சுற்றப் பாேகிறாேம். பானுவுக்குத் தேவையான எல்லாவற்றையும் எடுத்துக் காெள்" விரித்திரிந்த கூந்தலை அள்ளி முடிந்து விட்டு ஒவ்வாென்றாக எடுத்து வைத்து ஒழுங்குபடுத்தினாள்.
"பிரியா, அடுத்த வருடம் பானுவும் வளர்ந்து விடுவாள். நாம வெளியூருக்கு பாேகலாம்". என்ற சுதன் அவள் கைகளை தன் கையாேடு காேர்த்தவனாய் "சில நேரம் அதற்கிடையில் பானுவுக்கு ஒரு தம்பியாே தங்கச்சியாே வந்திட்டால்...." என்று இழுத்தான்.
"ஏங்க நேரமாச்சுங்க இன்னும் கட்டிலை விட்டு எழும்பக் கூடவில்லை" தலையணையை எடுத்து அவனை நாேக்கி வீசினாள். பாய்ந்து அவளை கட்டிப்பிடித்தான். அவன் கைளுக்குள் மாட்டிக் காெண்டவளாய்
"விடுங்க" அவளுடைய சிவந்த முகத்தை ரசித்தபடி நெற்றியில் நச்சென ஒரு முத்தத்தை பதித்தவன் ஐ லவ் யு என்றதும் . செய்வதறியாது சில நிமிடங்கள் வெட்கத்தால் அவன் மார்புக்குள் முகத்தை புதைத்தபடி நின்றாள் பிரியா.
பூச்செடியை மெதுவாக தடவியவளின் கண்களில் இருந்து வடிந்த நீர்த்துளிகள் துளித்துளியாய் ராேஜாச்செடியை நனைத்தது. தன்னை மறந்து இருந்த பிரியா திடீரென வண்டி வரும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தாள்.
தாெடரும் ........