மீண்டும் விடியும்

எதை முடித்துக் கொள்ள இந்த கடலலையின் முன் நிற்கிறேன் அவை விரிந்தலையும்  என் எண்ணத்தை பிரதிபலிப்பாக்கி என் பொற்பாதங்களில் நனைத்துக் கொண்டிருக்கின்றன.

வாசலில் ஒளியிழந்து பைக் நின்றது. என் மனவோட்டத்தை அடக்க முயன்று நான் தோற்றுப் போனேன். உரலில் அம்மா மாவாட்டும் ஓசை காதை உருட்டியது.செருப்பை கழற்றிய என்னால் கோபத்தை கழற்ற முடியவில்லை.

மாடியில் இருமும் அப்பாவின் முன் போய் நின்றேன்.அவர் வெளிறிப்போன ஒரு மஞ்சள் விசிறியை அசைத்தவாறே கண்களை மூடிக் கொண்டிருந்தார்.

ஒரு சிறு முனகலொலி கேட்டு அவர் கண் விழித்தார். எதிரே நின்று விசும்பும் என்னை பார்வையை கூர்மையாக்கி பார்த்தார்.அம்மா மாடியேறும் சத்தம் காதுகளுக்கு எட்டியது.

"நீங்க சொல்ற பொண்ணையே நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்பா, எனக்கு அவ வேணாம்பா, இனிமே நான் உங்க பேச்சையே கேக்கறன்பா" நான் குரலதிர கம்மினேன்

அம்மா என் தோள்சட்டையைப் பிடித்து வழித்திழுத்தாள்

"போதும்டா உன் நடிப்பு. நல்லாயிருந்த இந்த மனுஷன, நாலு பேரு முன்னாடி ஊர் சிரிக்க வைச்சி, இப்படி நடை பிணமாக்கிட்டு, இப்ப வந்து நாடகமாடுறியா? முதல வெளிய போடா, போடானு சொல்றேன்ல"

"அம்மா, நான் அவள மறந்துட்டேன்மா. இனிமே அவ இருக்கற பக்கம் கூட தலைவைச்சு படுக்கமாட்டேன்மா. என்னை நம்புமா"

வாசலில் குரலோலி எழும்பியது

"கார்த்திக்"

நான் அதிர்ந்தேன். அது கவிதாவின் குரல் .

அம்மா என் முகத்தை முறைத்து விட்டு அகன்றாள். அப்பா விழி அகலாது உறங்கிக் கொண்டிருந்தார்.

நான் கதவையறைந்துவிட்டு, படியிறங்குகையில் கவிதா அழுதுகொண்டு இருந்தாள்.

நான் அடக்கிய கோபத்தோடு, அவளை நெருங்க ,அவள் அழுதவாறே

"அப்பா சூஸைட் பண்ணிக்கிட்டாரு கார்த்திக்" என என் மார்பில் சாய நான் உருக்குலைந்து போனேன்

நான் அவளுடன் காரை எடுத்துக் கொண்டு புறப்படுகையில், அம்மா வாசலிலிருந்து திட்டும் ஒலி என் காதுகளுக்கு எட்டியது.

அவள் "ஸாரி கார்த்திக், நான் திரும்ப திரும்ப உனக்கு டார்ச்சர் கொடுக்கறேனு நினைக்கிறேன். ஐம் வெரி, வெரி ஸாரி . எனக்கு வேற வழித் தெரியலை"

நான் மௌனமாக இருந்தேன். எனக்குள் இருந்த கோபங்களனைத்தும் கண்ணீர் துகள்களாக வெளியேறிக் கொண்டிருந்தது.

நான் விசும்புவதை உள்ளுணர்ந்த அவள்

"அழுவுறியா கார்த்திக்"

நான் கண்ணீரை துடைத்துக் கொண்டு, சத்தமாக ஒரு பெருமூச்சு விட்டேன். என் கோபத்தை பறக்கவிட்ட மாதிரி.

"எப்படி ஆச்சு?" என்றேன்

அவர் கொஞ்ச நாளாவே அப் நார்மலா இருந்தார். பிசினஸ் லாஸானதுலே ரொம்பவே இடிஞ்சி போயிட்டார். டெய்லியும் தூக்க மாத்திரை சாப்பிட்டுட்டே இருந்தார். நான் வேலைக்கார அம்மாகிட்ட விசாரிச்சப்ப அவ தான் இதப்பத்தி சொன்னா. ஓ மை காட் நான் அவர் ரூம்குள்ள போறப்ப சீரியஸா பயந்துட்டேன். ஒரே மாத்திரை ஸ்மெல். அதுக்கப்புறம் அவர்கிட்ட பேசறப்ப அவர் என்கிட்ட கோபமா கத்திட்டேயிருப்பார். நான் அதுக்கு பயந்தே அவர்கிட்ட போகலை. ஆனா வேலைக்காரி மூலமா என்னை பத்தி விசாரிச்சிட்டே இருப்பார் "நான் சாப்பிட்டேனா இல்லையானு" ஒரு மறைமுகமான அக்கறை.இன்னிக்கு நான்  உன்கிட்ட சண்ட போட்டுட்டு என் ப்ரண்ட் மீரா வீட்டுக்கு போனப்ப தான் போன் வந்தது. என் அப்பா தூக்கு போட்டுக்கிட்டாருனு. நான் உடனே என் ப்ரண்ட அழைச்சிட்டு வீட்டுக்கு போனேன். அப்பாவ ஆம்புலன்ஸ்ல ஏத்திட்டு போயிட்டிருந்தாங்க. அப்ப தான் உனக்கு கால் பண்ணேன். நீ ஸ்வீட்ச் ஆஃப் பண்ணியிருந்த" அவள் மீண்டும் அழத் துவங்கினாள். அவளைத் தேற்றும் பொருட்டு என் கைகளை அவள் தலையில் வைத்து வருடினேன்.

கார் மருத்துவமனையை அடைந்ததும் இருவரும் இறங்கி உள் நுழைந்தோம். வாசலில் கவிதாவின் தோழி மீரா , யாமினி மற்றும் இரண்டொரு உறவினர்கள் நின்றுக் கொண்டிருந்தனர்.போஸ்மார்ட்டம் ரிப்போர்ட்டில் அவர் சூஸைட் செய்துக் கொண்டதை உறுதிப்படுத்த நாங்கள் அவர் பாடியை வண்டியில் ஏற்றிக் கொண்டு வீட்டிற்கு வந்தோம்.

--------------

அவள் அப்பாவின் புகைப்படத்தை வெறித்து நோக்கியபடியேயிருந்தாள்

அப்போது வேலைக்காரி சாப்பிட அழைத்தாள்

அவள் வேண்டாமென பிடிவாதம் பிடித்தால்

கவிதா கொஞ்சமா சாப்பிடு ப்ளீஸ்

இல்ல வேண்டாம் கார்த்திக் நீ போய் சாப்பிடு எனக்கு பசிக்கல

நீ இப்படி சொன்னாலாம் கேட்க மாட்ட இரு வரேன்

நான் அவள் வாய்க்குள் இட்லியை அமிழ்த்தினேன். அவள் அதை குழந்தையைப் போல கடித்தால்

"கார்த்திக் நீ எங்க என்ன பிரிஞ்சு போயிடுவியோனு பயந்தேன், நீ மட்டும் இன்னிக்கு வரலைனா நான் நிச்சயமா அப்பா பின்னாடியே போய் சேர்ந்திருப்பேன்"

"சீ வாய மூடு"

"அப்பறம் எப்படி சாப்பிடறது" அவள் சிணுங்க

நான் சிரித்தேன்

என் போன் அதிர்ந்தது

அம்மா காலிங்

நான் எடுத்தேன் என் அம்மா கோபமாக

உனக்கு வீடு வாசல்னு ஒண்ணு இருக்குனு நினைப்பிருக்கா இல்லையா

அம்மா அது வந்து

வேற பொண்ண கட்டிக்கிறேனு ரோசமா சொன்ன இப்ப எங்கடா போச்சு அந்த ரோசம்

அம்மா அது ஏதோ அவ மேல இருந்த கோபத்துல சொல்லிட்டேன் ஆனா உண்மையா நான் அவள மறக்கலமா மறக்கவும் முடியலமா

அப்பா உனக்கு பொண்ண பாத்துட்டார் நான் உனக்கு வாட்ஸ் அப் பண்றேன் பொண்ணு எப்படி இருக்கானு பார்த்து சொல்லு அவள தான் நீ கட்டிக்கணும்

அம்மா என்பதற்குள் அவள் போனை கட் செய்ய நான் வெறுப்பில் போனை தூக்கியெறிய மேற்பட்டேன்

பின்னால் வந்த கவிதா என் போனை பிடித்து இழுத்தாள்

என்ன ஆச்சு எதுக்கு இப்படி கோபப்படற

நான் மறுமொழி பேசாது நாற்காலியில் சென்றமர்ந்தேன் இருள் படர்ந்த வானத்தில் நட்சத்திரங்கள் துடித்துக் கொண்டிருந்தன

அவள் போனை உயிர்ப்பித்து எதையோ உற்று நோக்கினால் பின் என்னிடம்

கார்த்திக் யார் இந்த பொண்ணு என்ன மாதிரியே இருக்கா

நான் அதிர்ந்து அவள் கையிலிருந்த போனை உருவி என் கண்களில் குவித்தேன்

அவள் தான்

சொல்லு கார்த்திக் ஏன் பேசாம நிக்கற

அதற்குள் மொபைல் அதிர நான் எடுத்து காதில் அணைத்தேன்

என்னடா பொண்ணு புடிச்சிருக்கா

நான் குரலிழந்து விம்ம ஆரம்பித்தேன்

நீ போனதுக்கு அப்பறம் அப்பாகிட்ட விஷயத்தை சொன்னேன் அவர் உங்கள பிரிச்ச பாவம் நமக்கெதுக்குனு அந்த பிசாசயே கட்டிகிட்டு அழட்டும்னு சொல்லிட்டார்

நான் தாங்க்ஸ் என்றேன்

ஒழுங்கா வீடு வந்து சேரு என் மருமகள கூட்டிகிட்டு

நான் போனை அணைப்பதற்குள் கவிதா கையில் சூட்கேஸோடு வந்து நின்றாள்

வானம் நிலவொளியில் மலர நட்சத்திரங்கள் சிரித்துக் கொண்டிருந்தன

இப்பொழுது வானம் மிக அழகாக, இருளை விலக்கிய படி....


முற்றும்.

எழுதியவர் : S.Ra (31-Mar-20, 8:58 am)
சேர்த்தது : Ravichandran
Tanglish : meendum vidiyum
பார்வை : 438

மேலே