காதல் தொடர்ச்சி

காதல் ஒளி மயமானது
குளிர்தரும் நிலவு போல
ஆனால் என்றும் தேயா பால் நிலவு போல

காதல் பெண்ணா ஆணா என்றால்
காதல் பெண்ணே
ஏனெனில் காதல் தூய்மையானது
பெண் நதி கங்கையைப்போல்

காதல் தாயா தந்தையா என்றால்
காதல் தாய்தான் சந்தேகமில்லை
ஏனெனில் காதல் அன்பும் பரிவும்

இத்தனைகுணங்கள் தன்னுள் கொண்ட
காதல் ….. காட்சிதரா நிர்குணமே!

காதல் அதனால் கடவுள் போல




எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (1-Apr-20, 6:30 pm)
பார்வை : 221

மேலே