என்னை வாடி போடின்னு கூப்படறாங்க அம்மா

ஏன்டா முத்து நீ தனியாவா வந்த? எங்க உன் மனைவி தங்கம்?
@@@@@@
நான் கோவிச்சிட்டு வந்துட்டம்மா.
@@@@@
ஏன்டா நேத்துத்தான் உன் கல்யாணம் நடந்துச்சு. மாமியார் வீட்டுக்கு முறைப்படி அழைச்சிட்டு போனாங்க. நாங்க உன்னையும் தங்கத்தையும இன்னிக்கி மறுவீடு அழைக்க தயாராகிட்டு இருந்தோம். நீ திடுதிப்புனு தனியா மொகத்தைத் தொங்கப் போட்டுட்டு வந்து நிக்கிறயே. என்னடா இது?
@@@@@@@
அம்மா நீ திரைப்படத்திலும் தொலைக்காட்சித் தொடர்லயும் பாத்திருப்பயே. கணவனை மனைவி அவம் பேரைச் சொல்லியோ இல்லனா "வாடா, போடா, ஏன்டா, என்னடா, அதைச் செய்யுடா, இதைச் செய்யுடா"-ன்னுதானே சொல்லுவாங்க. அந்த தங்கம் என்ன "வாடி, போடி, காப்பி போடுடீ, டீ போடுடீ"ன்னெல்லாம் சொல்லறாங்க அம்மா. என்னை அவுங்க அப்பிடி கூப்படறது எனக்கு வெக்கமா இருக்குதம்மா. என்னை மத்த மனைவிங்க மாதிரி "வாடா, போடா"ன்னு மரியாதையாக் கூப்புட்டுத்தான் அவுங்ககூட சேர்ந்து வாழமுடியும். மரியாதை தெரியாத மனைவிகூட என்னால குடும்பம் நடத்த முடியாதுப்பா.
@@@@@
அப்பிடியா. சரி. நீ அழவேண்டாம். நீ மொதல்ல குளிச்சிட்டு சாப்பிட்டுட்டு ஓய்வு எடு. என்ன செய்யலாம்னு நானும் உங்க அப்பாவும் கலந்து பேசி யோசனை பண்ணிச் சொல்லறோம்.
@@@@@@@
சரிம்மா. .

எழுதியவர் : மலர் (1-Apr-20, 9:28 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 198

மேலே