ஒன்று முதல் பதினெட்டு
'ஒன்று முதல் பதினெட்டு வரை அடைசொல் இல்லாமல் அமைத்து ஒரு வெண்பா இயற்றுக’ என்றார் ஒருவர்.
ன், ண் மெல்லின எதுகையமைந்த நேரிசை வெண்பா
ஒன்றிரண்டு மூன்றுநான்(கு) ஐந்தாறே ழெட்டுடன்
ஒன்பதுபத் துப்பதி னொன்றுபன்னி - ரண்டு
பதின்மூன்று னான்குபதி னைந்துபதி னாறு
பதினேழ் பதினெட்டு பார். 76
- கவி காளமேகம்
பொருளுரை: இவ்வெண்பாவில் கண் முறையே ஒன்று முதல் பதினெட்டு வரையும் வந்தமை காண்க.