காதல் தத்துவம்
காதல் தத்துவம்
மயக்கமே கலக்கமே மனதிலே குழப்பமே
என்னிலும் ஏழை இருப்பது தெரியும்
அதுவல்ல கவலை ஐயோ இறைவா
மயங்கிய மனதை மாற்றிடச் சொன்னார்
மாற்றிட அவள்கதி அதுதான் கவலை
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாழ்க்கையே மாறிட மிஞ்சுவது என்ன
மனதிலாசை எதற்கு வளர்த்தாய்
மறந்து வாழ நானும் தியாகியோ
ஆயிரம்பேர் வருவார் ஆயிரம்பேர் போவார்
அவள்போல் ஆகிட எவரால் முடியும்
பிறரும் வாழக் கெடவும் நானோ
நீயும் இதனை எப்படி செய்வாய்
சொல்லிடு உண்மை உரக்க இறைவா
எவரும் கேட்க எதுவும் புரியும்
உண்மை எவர்க்கும் புரிந்துபோகும்
மனதின் மங்கை போனபின்னும் வாழ்வதேனோ