ஆதவனுக்கு நான் விடும் கவிதை

கோடையில் தகிக்கும் அக்கினி விண்மீனே ஆதவா
கொடுமையின் மொத்த உருவாய் பூமியில்
கோரத் தாண்டவம் ஆடித் திரியும் இந்த
கொரோனாவை உன் தீயால் தீய்த்து சாம்பலாய்க்
கருக்கிட முடியலையே பின்னாலும் ?
'அக்னி நட்சத்திரத்தில்' முடித்திடுவேன் இந்த
இறைப்பணியாய் என்கிறாயே.... ஆனால் அதற்குள்
கோரகொரோனா இன்னும் எத்தனை மானிடரை
வதைப்பானோ யார் அறிவார்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (4-Apr-20, 1:28 pm)
பார்வை : 74

மேலே