சாயல்
ஒருபோதும் என்ன அடிச்சதில்ல
அப்பா ஒருநாளும் நீ குடிச்சதில்ல
ஒழுக்க கேடா இருந்ததில்ல
ஒழுகும் நீரா விழுந்ததில்ல
இருபத்து நாலு மணிநேரத்தில
இருளில் கூட உனக்கு உறக்கமில்ல
உள்ளங்கையின் சூட்ட
ஒரு கணமும் குறைத்ததில்ல
கிழிந்த சட்டைய நீ உடுப்ப
கழிந்த பணத்துல அத எடுப்ப
புது சொக்கா எனக்கு கொடுப்ப
புதுபணத்த அதுக்கு செலவழிப்ப
எனக்கு குளுரும்முன்னு நீ நடுங்குவ
என் குளுரையெல்லாம் நீ விழுங்குவ
இரண்டு ரூபாய் தினங்கொடுப்ப
இரண்டு தாயாய் நீ இருப்ப
கொலுத்து வேலை செஞ்ச உன்ன கொளுத்தவா நா பொறந்தேன்.
நீ வெளுத்தும் சாயம் போனாலும்
உன் சாயல் மாறாம நான் இருந்தேன்..
உன் சாயல் மாறாம நானிருந்தேன்
உன் சாயலோடு நான் பிறந்தேன்..
-ஜாக்.✍️