தீபம் ஏற்றலாமா
மதத்தை முன்னிறுத்தினால்
மற்றவை தானே மறைந்துவிடும்
என்ற எண்ணத்தை
எல்லோரிடத்தும் விளைவிக்க -
இந்தவாரம் தீபம்
அடுத்தவாரம் மாவிளக்கு
அதற்கு அடுத்தவாரம் தீச்சட்டி
அதற்கு அடுத்தவாரம் தீ மிதி
அதற்கு அடுத்தவாரம் அலகுகுத்தல்
அதற்கு அடுத்தவாரம்....???
மதம் சார்ந்த சடங்குகளை -
மதம் சார்ந்த அனைவருமே
மதிக்கிறோம் - அதற்காக
எரியும் மின்விளக்கை
அனைத்துவிட்டு
அகல்வொளி ஏற்றி
அறிவை வெளிப்படுத்த வேண்டாம் -
அறிவியலின் துணையோடு
அதை எதிர்கொள்ளும்
அறிவை வளர்த்து
அறிவொளி ஏற்றி
அறிவியலின் அடுத்தபடிக்கு செல்வோம்
வாரமொரு வேடிக்கை
இதுவே சிலருக்கு வாடிக்கை
நோயோடு அரசியலும்
நோயோடும் மதமும் வேண்டாம்
நோய்தீர்க்கும் மருந்தே போதுமானது -
அறிவும் அறிவியலும்
கடைசி நம்பிக்கையாய் இருக்கட்டும்
கடவுள் நம்பிக்கை -எல்லோருக்கும்
கடுகளவும் குறையவில்லை - அதை
வெளிப்படுத்தும் இடத்தில்
வெளிப்படுத்தினால் போதுமானது...!!!
- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி