கொரோனா ஆத்திச்சூடி

கவிதை
கொரோனா ஆத்திச்சூடி
பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
அமைதி தனிமை
அதிகம் விரும்பு
ஆர்ப்பாட்டம் இல்லாமல் இரு!

இயன்றவரை தொடாமல் இரு
ஈன்றவளாயினும்
முக கவசமுடன் பேசு!

உல்லாசம் உற்சாகபானம்
எல்லாம் மற
ஊர்சுற்றுவதை நிறுத்து!

எறும்புகள்போல் மொய்க்காதே
ஏற்றம் இனிமை தரும்
சட்டத்தை மதி!

ஐவருக்கு கீழ் மேல்
இருந்தாலும் கூடாதே
ஒத்துழைப்பு அரசுக்கு கொடு!

ஓங்கி நிற்கும் உன் வாழ்வு
ஒளவைமொழியாக கருது
அ.:.தே கொரோனா அழிவதற்கு வழி!

பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
பள்ளிக்கரணை, சென்னை

எழுதியவர் : பொன்விலங்கு பூ.சுப்ரமணிய (6-Apr-20, 12:36 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 194

மேலே