கிருமி பாடம்

மனிதம் வாழ வந்தது கிருமி,
பசித்தோர் எங்கேயேன புசித்தோர் தேட,
மனிதம் தழைத்தது, மனிதம் தழைத்தது !

குழந்தையை கான நேரம் இன்றி,
மழலை மனமே மானுடம் மறந்திட,
தாய்மை தழைத்ததும் கிருமியின் வழியேதானே !

கால வேக ஓட்டத்தின் இடையே,
கணவன் மனைவி உறவுகள் ஏங்கே,
கிருமியின் ஊடலால் திரும்பின ஊடல் !

அலுவல் பணியில் ஆயிரம் உழைச்சல்,
புழுவாய் மாறி புன்னகை மறந்தேன்,
புதிய நோயால் புணரமைந்தது வாழ்வியல்தானே !

புதியதோர் வாழ்வில் உறவுகள் விலக,
உணர்வுகள் அற்று பிணமாய் போனேன்,
கிருமியின் வரவால் உயிர்தந்தது உறவுகள்தானே!

காசின் தேவையால் கடவுளை மறந்திட,
சோதனை தீர வழிபட சென்றேன்,
கதவுகள் மூட ஞபகம் வந்ததுதானே !

மனிதம் வாழ வந்தது கிருமி,
எளியோர் அல்ல, வலியோர் அல்ல,
தொட்டால் தொற்று நிரந்தரமல்ல !

இயற்கையை மறந்து மானுடம் துறந்த,
மனிதர்களுக்காக படைத்தோன் சொன்ன,
பாடம்தானே, பாடம்தானே !!!

கோரன்டைன்
தௌபீஃக்

எழுதியவர் : தொபீஃக் (6-Apr-20, 8:07 pm)
சேர்த்தது : ஷிபாதௌபீஃக்
பார்வை : 115

மேலே